Home நாடு ‘பொடா’வில் கைது செய்யப்பட்டால் 4 ஆண்டுகள் சிறை – சாஹிட் எச்சரிக்கை

‘பொடா’வில் கைது செய்யப்பட்டால் 4 ஆண்டுகள் சிறை – சாஹிட் எச்சரிக்கை

496
0
SHARE
Ad

Ahmad-Zahid-Hamidiகோத்தபாரு, மார்ச் 6 – பயங்கரவாத தடுப்புச் சட்டம் எனப்படும் ‘பொடா’வின் கீழ் கைது செய்யப்படும் நபர்களை 4 ஆண்டு காலம் தடுத்து வைக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் தலைதூக்காமல் தடுக்க இப்புதிய சட்டமானது இம்மாதம் கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமீடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் பிடிபடும் நபர்களை 2 ஆண்டுகள் தடுப்புக் காவலில் வைக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் வழக்குகளின் தன்மைக்கேற்ப தடுப்புக் காவல் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது உள்நாட்டவராக இருந்தாலும் சரி, வெளிநாட்டவராக இருந்தாலும் சரி, அத்தகைய செயல்களை முளையோடு கிள்ளியெறிய விரும்புகிறோம். தேசிய பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க இப்புதிய சட்டம் தேவை.

“இந்தச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காக அரசாங்கம் நிச்சயம் பயன்படுத்தாது. இச்சட்டத்தை தனிப்பட்ட வகையில் நானே தாக்கல் செய்வேன். அனைத்தும் நல்லவிதமாக நடந்தேறினால் ‘பொடா’ சட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும்,” என்றார் சாகிட் ஹமிடி.

நாட்டின் பாதுகாப்பு கருதி கொண்டு வரப்படும் இந்தப் புதிய சட்டம் நிறைவேற நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்,” என அவர் கேட்டுக் கொண்டார்.