Home இந்தியா என் மகளைப் பற்றிய ஆவணப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் – நிர்பயாவின் தந்தை

என் மகளைப் பற்றிய ஆவணப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் – நிர்பயாவின் தந்தை

809
0
SHARE
Ad

Original-Picture-Of-Damini-delhi-bus-gang-rape-victimபுதுடெல்லி, மார்ச் 6 – தனது மகள் குறித்து பிபிசி தயாரித்துள்ள ஆவணப் படத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும் என டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலயான மருத்துவ மாணவி நிர்பயாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணப் படத்தை வெளியிட இந்திய நீதிமன்றம் ஒன்று தடை விதித்த போதிலும், பிபிசி அதை புதன்கிழமை மாலை ஒளியேற்றியது. நிர்பயாவை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான முகேஷ் சிங் கூறிய சில கருத்துக்கள் இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளன.

பலியான அப்பாவிப் பெண் நிர்பயா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறு அனுமதித்திருந்தால் அவர் கொல்லப்பட்டிருக்க மாட்டாள் என்றும் முகேஷ் சிங் தெரிவித்துள்ளான்.

#TamilSchoolmychoice

மேலும் நல்ல குணமுள்ள குடும்பப் பெண்கள் இரவு 9 மணிக்கு மேல் வீட்டிற்கு வெளியே சுற்றித் திரிய மாட்டார்கள் என்றும் அவன் கூறியுள்ள கருத்துக்கள் இந்திய முழுவதும் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

nirbaya_parents_002மேலும் இந்த ஆவணப் படத்தை திரையிடுவது தொடர்பிலும் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பிபிசி தயாரித்துள்ள ஆவணப் படம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று என்று நிர்பயாவின் தந்தை கூறியுள்ளார்.

“சிறையில் இருக்கும்போதே இப்படிப் பேசும் அந்நபர் வெளியே இருந்தால் எப்படிப் பேசுவார் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த ஆவணப் படத்துக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என தெரியவில்லை. எனினும் நாடு ஒரு முடிவு எடுக்கும்போது நாம் அதை ஆதரிக்க வேண்டும்,” என்று நிர்பயாவின் தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.