படத்தில் ஜெயம் ரவியும், ஹன்சிகா மோத்வானியும் ஜோடியாக நடித்துள்ளனர். மற்றொரு நாயகியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். மற்றும் வி.டிவி கணேஷூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு இசை டி. இமான், தயாரிப்பு எஸ்.நந்தகோபால், இயக்கம் லஷ்மண்.
படம் பற்றி இயக்குனர் லஷ்மணிடம் கேட்டபோது: “இதுவொரு மகிழ்ச்சியான காதல் படம். இப்படம் பார்க்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் ரசிப்பார்கள். இந்தப் படத்திற்காக புரசைவாக்கம் அருகே பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டன”.
‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே காணலாம்: