Home கலை உலகம் ஜெயம் ரவியின் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் டி.ராஜேந்தர் பற்றிய காட்சிகள் நீக்கம்!

ஜெயம் ரவியின் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் டி.ராஜேந்தர் பற்றிய காட்சிகள் நீக்கம்!

768
0
SHARE
Ad

jayam 1சென்னை, ஜூன் 2 – ஜெயம்ரவி ஹன்சிகா நடித்திருக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப்படத்தில் டி.ராஜேந்தர் பேசுவது போலவும், அவருடைய புகழ்பெற்ற வரியான டண்டணக்காவை வைத்து ஒரு பாடலையும் உருவாக்கியிருந்தார்கள்.

அது மட்டுமின்றி படத்தில் ஜெயம்ரவி டி.ராஜேந்தரின் ரசிகராக நடித்திருந்தாராம். அதனால் டி.ராஜேந்தர் படம் வெளியாகிற அன்று திரையரங்கில் கொண்டாட்டம் நடத்துவது போன்ற காட்சிகள் மற்றும் பாடல் இடம்பெற்றிருந்ததாம்.

#TamilSchoolmychoice

டண்டணக்கா பாடல் சமுகவலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது. அதன்பின்னர் டி.ராஜேந்தர் தன்னைப் பற்றிய எந்த விசயமும் படத்தில் இடம்பெறக்கூடாதென்று வழக்குப்போட்டார்.

இதனால் பல கட்டங்களில் அவரிடம் சமரசப்பேச்சுகள் நடந்தன என்று செய்திகள் வெளியாகின. ஆனால் எவ்வித சமரசத்துக்கும் அவர் ஒப்புக்கொள்ளவில்லையாம்.

அதோடு தன் பெயர் மற்றும் ‘டண்டணக்கா’ பாடல் ஆகியனவற்றைப் பயன்படுத்த பெரும்தொகை கொடுக்கவேண்டும் என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

அவ்வளவு தொகை கொடுத்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை வைக்கவேண்டாம் என்று படக்குழுவினர் முடிவுசெய்துவிட்டதாகத் தெரிகிறது.

இப்போது படத்தில் அவர் பெயர் உட்பட எல்லாவற்றையும் நீக்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. நீக்கிவிட்டுப் படத்தைப் பார்த்தாலும் எவ்விதக்குறையுமில்லை படம் நன்றாகவே இருக்கிறது என்று சம்பந்தப்பட்டவர்கள் திருப்தியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.