Home கலை உலகம் ‘ரோமியோ ஜூலியட்’ படக்குழுவினரிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு டி.ராஜேந்தர் மனு!

‘ரோமியோ ஜூலியட்’ படக்குழுவினரிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு டி.ராஜேந்தர் மனு!

633
0
SHARE
Ad

tranejdeeeerசென்னை, ஏப்ரல் 20 – ’ரோமியோ ஜூலியட்’ படத்தின் ‘டண் டணக்கா…’ எனும் பாடல் சம்பந்தமாக ரூ.1 கோடி கேட்டு இசையமைப்பாளர்கள் இமான் மற்றும் அனிரூத்துக்கு டி.ராஜேந்தர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து டி.ராஜேந்தர் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில்,

“தமிழ் சினிமாவில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்தர் தனக்கென்று வித்யாசமான பாணியில் வசனங்களை உச்சரித்து, நடிப்பிலும் தனி இடத்தை உருவாக்கி இருப்பவர். மாநில அரசு, மத்திய அரசின் பல்வேறு விருதுகைளப் பெற்றிருப்பவர்”.

“இதேபோல கலைக்கு இவர் ஆற்றி வந்திருக்கும் அரிய சேவைக்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து எண்ணற்ற வசதிகளைக் குவித்திருப்பவர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த நந்தகோபால் என்பவர் தயாரிக்கும் படம் ரோமியோ ஜூலியட். இந்த படத்தின் இயக்குனர் லட்சுமணன். இசையமைப்பாளர் டி. இமான்”.

#TamilSchoolmychoice

“இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் ‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று ஆரம்பமாகிறது. இதை அனிரூத் பாடியுள்ளார். இந்தப் பாடலில் டி.ராஜேந்தரின் சொந்தக் குரலை பதிவுசெய்துள்ளனர். பாடலின் பின்னணியில் டி.ராஜேந்தர் பேசும் வசனம், அவர் குரலிலேயே ஒலிக்கிறது”.

“இதன் மூலம் என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். கட்சிக்காரரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும் அவர் பேசும் வசனத்தை, பின்னணியில் ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்”.

imman-anirudhபல ஆண்டுகளாக பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி இடம் வைத்திருக்கும் என் கட்சிக்காரரின் தனி நபர் உரிமையை இதன் மூலம் மீறியிருக்கிறீர்கள். இதே பாட்டும், பதிவு செய்யப்படும் காட்சிகளும் ‘யூடுயூப்’ தளத்திலும், ‘சன் மியூசிக்’ தொலைக்காட்சியிலும் வெளியிடப்பட்டுள்ளது”.

“படம் திரையிடப்படுவதற்கு முன்பு இப்படி ஒரு வெளியீடு, ‘பெருமைக்குரிய’ என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்தோடு அமைந்திருப்பதாகத் தெரிகிறது”.

“சட்டத்துக்குப் புறம்பாக என் கட்சிக்காரரின் முறையான அனுமதியில்லாமல் அவர் பெயரையும், புகழையும், அவரது தனிப்பாணி உச்சரிப்பு வசனத்தையும் பயன்படுத்தியிருப்பதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு தரவேண்டும்”.

மேலும் யூடுயூப், சன் மியூசிக் தொலைக்காட்சிகள் உள்பட எந்த ஒரு ஊடகத்திலும், எந்த ஒரு தளத்திலும் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.