Home கலை உலகம் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இந்தியில் இயக்குகிறார் பிரபுதேவா!

‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இந்தியில் இயக்குகிறார் பிரபுதேவா!

781
0
SHARE
Ad

pdசென்னை, ஜூன் 29- ஜெயம் ரவி- ஹன்சிகா நடித்த படம் ‘ரோமியோ ஜூலியட்’.  லட்சுமணன் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் உருவான இப்படம் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் இடம்பெற்ற  ‘டண்டனக்கா…’ பாடல், படம் வெளியாவதற்கு முன்னதாகவே இரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி’  பாடலும் வித்தியாசமான பெண் குரலுக்காகப் பெரிதும் இரசிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தைப்  பார்த்த பிரபுதேவாவுக்கு இப்படம் மிகவும் பிடித்துப் போனது.

#TamilSchoolmychoice

இந்தியில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பிரபுதேவா, இப்படத்தைத் தகுந்த நடிகர்களை வைத்து இந்தியில் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஜெயம் ரவி- ஹன்சிகா நடித்த ‘எங்கேயும் காதல்’ படத்தைப் பிரபுதேவா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.