Home இந்தியா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு நாளை வெளியீடு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு நாளை வெளியீடு!

547
0
SHARE
Ad

rkசென்னை, ஜுன் 29- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. மொத்தம் 17 சுற்றுகளின் முடிவில் இறுதி நிலவரம் தெரியும்.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்குச் சீல் வைக்கப்பட்டு, மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரிக் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணிமேரிக் கல்லூரியில் தற்போது 3 அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முதல் அடுக்கில் மத்திய துணை ராணுவப் படையினரும், மற்ற இரண்டு அடுக்குகளில் ஆயுதப்படைக் காவல்துறையினரும், சென்னை மாநகரக் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அங்கீகார அடையாள அட்டை உள்ளவர்களும், வேட்பாளர்களின் முகவர்களும் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

பதிவான வாக்குகள் மொத்தம் 17 சுற்றுகளாக எண்ணப்படும்.காலை 9 மணிக்கு முன்னணி நிலவரமும், 11 மணிக்கு இறுதி நிலவரமும் தெரியவரும்.