Home உலகம் பிரதமர் பதவிக்குப் போட்டியிட ராஜபக்சே திட்டம்!

பிரதமர் பதவிக்குப் போட்டியிட ராஜபக்சே திட்டம்!

638
0
SHARE
Ad

rajapakseகொழும்பு,ஜூன் 29- இலங்கையில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட ராஜபக்சே திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராகபக்சே படுதோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிறிசேனா, வெற்றி வாகை சூடி அதிபர் பதவியைக் கைப்பற்றினார்.

இந்நிலையில்,சிறிசேனா இலங்கைப் பாராளுமன்றத்தை அண்மையில் கலைத்து உத்தரவிட்டார். எனவே, இலங்கையில் வருகிற ஆகஸ்டு மாதம் 17–ந் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது..

#TamilSchoolmychoice

ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் சிலர் சிறிசேனாவிடம், ராஜபக்சேவுக்குக் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றனராம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று கண்டி நகரில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய முன்னாள் அதிபர் ராஜபக்சே, ‘‘வருகிற செவ்வாய்க்கிழமை வரை பொறுத்திருங்கள்;அன்றைக்கு நல்ல செய்தி வரும்” என்று சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.

ஒரு வேளை கட்சியின் தலைவரும், இலங்கை அதிபருமான சிறிசேனா, ராஜபக்சேவைப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்காவிட்டால் வேறொரு கூட்டணி அமைத்துப் பிரதமர் பதவிக்குப் போட்டியிடலாம் என்று தெரிகிறது.