Home தொழில் நுட்பம் கூகுளைத் தொடர்ந்து ஆபாச பதிவுகளுக்கு எதிராக டுவிட்டரும் களமிறங்கியது!

கூகுளைத் தொடர்ந்து ஆபாச பதிவுகளுக்கு எதிராக டுவிட்டரும் களமிறங்கியது!

514
0
SHARE
Ad

google_twitter_dealவாஷிங்டன், மார்ச் 17 – முன்னணி நட்பு ஊடகமான டுவிட்டர் பழிவாங்கும் ஆபாச பதிவுகள் மற்றும் ஒருவரின் அனுமதியின்றி பகிரப்படும் பாலியல் படங்கள் ஆகியவற்றை தடை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

ஆபாச பகிர்வுகள் மற்றும் விளம்பரங்களுக்கு எதிராக ‘கூகுள்’ (Google) மற்றும் ‘ரெட்டிஃப்’ (Reddif) களமிறங்கியது போல் தற்போது டுவிட்டரும் களமிறங்கி உள்ளது.

சமூக ஊடகங்களும், வலைப்பதிவுகளும் பல்வேறு நல்ல செயல்களுக்கு பயன்பட்டு வந்தாலும், இதில் சமூகத்திற்கு எதிரான செயல்களும், பெண்களுக்கு எதிரான ஆபாசங்களும் அவ்வபோது தலைதூக்கத்தான் செய்கின்றன.

#TamilSchoolmychoice

இவற்றுக்கு எதிராக உலகளாவிய தர மதிப்பீடு வேண்டும் என விமர்சகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், பல நிறுவனங்கள் இதனை சட்டை செய்வதில்லை. காரணம், அதில் இருக்கும் பெரு வர்த்தகம்.

இந்நிலையில், டுவிட்டர் சமீபத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது பற்றி சைபர் பொது உரிமைகள் முன்னெடுக்கும் அமைப்பின் இயக்குனர் மேரி ஆன் பிராங்க்ஸ் கூறுகையில்,

“பழிவாங்கும் ஆபாச பதிவுகள் மற்றும் ஒருவரின் அனுமதியின்றி பகிரப்படும் பாலியல் படங்கள் ஆகியவற்றை தடை செய்ய டுவிட்டர் முடிவு செய்துள்ளது. இதற்கான கொள்கைகள் மற்றும் வழிமுறைகளையும் அந்நிறுவனம் வகுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

ரெட்டிஃப், இதேபோன்ற தடையை கடந்த மாதம் அறிவித்தது. கலிபோர்னியா மாகாணத்தில் ஆபாச பதிவுகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தொடர்பான சட்டம் கடந்த 2013-ம் ஆண்டே தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், சமூக ஊடகங்கள் மற்றும் வலைப்பதிகள் அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

கலிபோர்னியா மாகாண சட்டப்படி, மற்றவரின் அந்தரங்கப் புகைப்படங்கள் குறிப்பிட்ட அந்த நபரின் அனுமதி இல்லாமல் வெளியிட்டால், அது சைபர் குற்றமாகும்.

இது போன்ற சட்டங்கள் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. சம்மந்தப்பட்ட நிறுவனங்கள், தாமாக முன்வந்து சமூக அநீதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத வரையில் எத்தகைய சட்டங்கள் வந்தாலும் அவை பயனளிக்காது. அந்த வகையில் டுவிட்டர் எடுத்துள்ள முடிவுகளை பேஸ்புக் போன்ற மற்ற நிறுவனங்களும் எடுக்க வேண்டும்.