சிங்கப்பூர், மார்ச் 23 – இன்று திங்கட்கிழமை அதிகாலை முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ காலமானது குறித்த தகவலை, அவரது மகனும், சிங்கப்பூரின் நடப்பு பிரதமருமான லீ சியான் லூங், மிகுந்த வருத்தத்தோடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆங்கிலம், மலாய், சீனம் என மூன்று மொழிகளிலும் பேசிய லீ சியான் லூங்கின் அறிவிப்பு, அந்நாட்டின் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் செய்தித் தளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
அதேவேளையில், சிங்கப்பூர் பிரதமர் துறை அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.
தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட லீ சியான் லூங், தனது பேச்சின் ஊடே சில இடங்களில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.
“சிங்கப்பூரின் தந்தை இன்று நம்மோடு இல்லை. நமக்கு ஊக்கம் அளித்தவர், தன்னம்பிக்கை அளித்தவர், நம்மிடையே ஒற்றுமையை நிலைநாட்டியவர். போராடி சுதந்திரத்தைப் பெற்று இந்த நாட்டை உருவாக்கியதோடு, சிங்கப்பூரர்கள் பெருமையடையும் படி வழி நடத்தியவர். அவரைப் போன்ற இன்னொரு மனிதரைப் பார்க்க இயலாது” என்று லீ சியான் லூங் கூறியுள்ளார்.
லீ சியாங் லூங்கின் முழு நீள உரை காணொளி வடிவில்:-