சிங்கப்பூர், மார்ச் 24 – நேற்று அதிகாலை மறைந்த சிங்கையின் முதல் பிரதமரும், நவீன சிங்கப்பூரின் தந்தையாகவும், சிற்பியாகவும் போற்றப்படுபவரான லீ குவான் இயூ தனது பதவியை விட்டு விலகிய பின்னரும் உலகத் தலைவர்களால் அன்போடும், மரியாதையோடும் வரவேற்கப்பட்டவர். அதோடு, பல உலகத் தலைவர்களும் அவரது ஆலோசனையையும், கருத்துக்களையும் தொடர்ந்து அவரிடமிருந்து பெற்று வந்தனர்.
லீ குவான் இயூவின் கடந்த கால அரசியல் பயணத்தில் சில நிகழ்வுகளும் – சில முக்கிய பிரமுகர்களோடு நடத்திய சந்திப்புகளும் – படச் செய்திகளாக:-
கடந்த 17 மார்ச் 2006இல் சிங்கப்பூருக்கு வருகை தந்த பிரிட்டனின் மகாராணி எலிசபெத்துக்கு வழங்கப்பட்ட அரச விருந்துபசரிப்பில் லீ குவான் இயூ…
27 ஏப்ரல் 2005 – கோலாலம்பூருக்கு வருகை மேற்கொண்ட லீ குவான் இயூ முன்னாள் பிரதமர் துன் மகாதீரை அவரது புத்ரா ஜெயா அலுவலகத்தில் சந்தித்து அளவளாவியபோது…
28 மார்ச் 2007 – கான்பெர்ராவில் அப்போதைய ஆஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹோவார்டை லீ குவான் இயூ சந்தித்தபோது….
13 நவம்பர் 2009 – சிங்கப்பூரில் நடைபெற்ற ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள விரையும் லீ குவான் இயூ தனது காற்சட்டையை சரி செய்கின்றார்…
1 மே 2006 – சிங்கப்பூரில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில் தனது மனைவியோடு கலந்து கொண்ட லீ குவான் இயூ, உற்சாகக் கொண்டாட்டத்தில் எழுந்த சத்தத்தினால் காதைப் பொத்திக் கொள்கின்றார்….
15 ஆகஸ்ட் 1955 – கறுப்பு வெள்ளைக் காலம் – சிங்கப்பூரில் தனது பிஏபி கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் இளவயது லீ குவான் இயூ….
16 அக்டோபர் 2006 – அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷை அவரது வெள்ளை மாளிகை அலுவலகத்தில் லீ குவான் இயூ சந்தித்துப் பேசியபோது….
19 நவம்பர் 2007 – சிங்கப்பூரில் ஆசியான் உச்ச நிலை மாநாடு நடைபெற்றபோது வணிக தொடர்பு நிகழ்ச்சியொன்றைத் தொடக்கி வைத்த போது லீ குவான் இயூவும் சீன அதிபர் வென் ஜியா பாவ்வும் –
சீனாவின் எதிர்கால அசுர வளர்ச்சியை பல ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து அந்நாட்டுடன் வர்த்தக, வெளியுறவுத் தொடர்புகளை லீ குவான் இயூ தலைமைத்துவத்தில் ஏற்படுத்திக் கொண்ட முதல் நாடு சிங்கப்பூராகும்.
3 ஆகஸ்ட் 1972 – சிங்கப்பூர் தேர்தலில் வென்ற பின்னர் திறந்த வாகனத்தில் மக்களின் உற்சாக வரவேற்போடு வெற்றி உலா வரும் லீ குவான் இயூ
படங்கள்: EPA