Home இந்தியா “நாட்டைக் கட்டியெழுப்பிய தலைவர் லீ குவான் யூ”: சோனியா காந்தி இரங்கல்!

“நாட்டைக் கட்டியெழுப்பிய தலைவர் லீ குவான் யூ”: சோனியா காந்தி இரங்கல்!

641
0
SHARE
Ad

forbes-sonia-gandhi-1040lg041110புதுடெல்லி, மார்ச் 24 – சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூவின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியும் தனது  இரங்கல் செய்தியைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில், “ஜவஹர்லால் நேருவின் 37-ஆவது நினைவு தின நிகழ்ச்சிக்கு லீ குவான் யூ வருகை தந்து உரையாற்றியதை நினைவு கூர்ந்துள்ளார்”.

“நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை மிக வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்ற ஆசியத் தலைவர்களில் லீ குவான் யூவும் ஒருவர். இந்தியாவுடனும் காங்கிரஸ் கட்சியுடனும் அவர் நல்லுறவு பாராட்டி வந்தார்,” என்று சோனியா காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

லீ குவான் யூவின் மறைவுக்கு சோனியா காந்தி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட அறிக்கை ஒன்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.