சிங்கப்பூர், மார்ச் 30 – நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் சிற்பி லீ குவான் இயூவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு, தங்களின் தலைமகனுக்கு இறுதிப் பிரியாவிடை தெரிவிக்கும் சோகத்தில் சிங்கப்பூர் மக்கள் கண்ணீரில் நனைந்து கொண்டிருக்க, வானமும் அந்த மக்களின் சோகத்தைப் பிரதிபலிப்பது போல், மழையாகக் கொட்டிக் கொண்டிருந்தது.
சிங்கப்பூர் மக்களின் ஈரக் கண்களைப் போலவே, அழுத வானத்தின் கண்ணீர்த் துளிகளை உள்வாங்கிக் கொண்டு ஈரமாகிக் கிடந்த சிங்கை மண்ணும் தனது முதல் மைந்தனை இழந்த சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க,
லீ குவான் தன் வாழ்நாளில் உருவாக்கிய அழகிய விரிந்த சாலைகளின் வழியே அவரது நல்லுடல் இராணுவ வாகனத்தின் மீது கிடத்தப்பட்டு ஊர்வலகமாகக் கொண்டு செல்லப்பட்டது.
ஊர்வலத்திற்குப் பின்னர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் கலாச்சார மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள அஞ்சலி உரைகள் வழங்கப்பட்டன.
அதன் பின்னர், குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்ட தனிப்பட்ட நிகழ்வாக லீ குவான் இயூவின் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.
இராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்படும் லீ குவான் இயூவின் நல்லுடலுக்கு சாலையின் இருபுறத்திலும் நின்று இறுதி மரியாதை செலுத்தி பிரியாவிடை வழங்கும் சிங்கப்பூரியர்கள்…
பெய்த மழையால் ஈரமாகிக் கிடந்த சாலையின் வழியே லீ குவான் இயூவின் நல்லுடல்…
இராணுவ மரியாதை வழங்கப்படுகின்றது
நெஞ்சில் கைவைத்து தங்களின் இறுதி மரியாதையை செலுத்தும் மக்கள்
லீ குவான் இயூவின் நல்லுடல் ஏந்தியபடி இராணுவ வீரர்கள்
படங்கள்: EPA