Home தொழில் நுட்பம் மெய்நிகர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் பேஸ்புக் தீவிரம்!

மெய்நிகர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் பேஸ்புக் தீவிரம்!

523
0
SHARE
Ad

facebook

கோலாலம்பூர், மார்ச் 30 –  ‘கேம் சேன்ஜர்’ (Game Changer) என்ற ஆங்கில வார்த்தை ஆட்டத்தின் போக்கை மாற்றுபவர் என்று பொருள்படும். தொழில் நுட்பங்களை பொருத்தவரையில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நிறுவனங்கள் கேம் சேன்ஜராக இருந்துள்ளன. அதில் பேஸ்புக்கும் குறிப்பிடத்தக்க ஒன்று.

நட்பு ஊடகங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அந்நிறுவனம், அவ்வபோது பல்வேறு புதுமையான விஷயங்களையும் ஆய்வு செய்து அறிமுகப்படுத்தும். அந்த வகையில் ‘மெய்நிகர்’ (Virtual Reality) தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய நிறுவனமாக பேஸ்புக் உருவாகவிருக்கிறது.

#TamilSchoolmychoice

‘டோடல் ரீகால்’ (Total Recall) என்றொரு ஆங்கிலப் படத்தில், ஆய்வு மையம் ஒன்றில் நாம் வாழ விரும்பும் வாழ்க்கையை நமக்கு மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்படுத்திக் கொடுப்பர். வெறும் கற்பனையானது என்றாலும், கருவியை பொருத்திக் கொள்பவர்களுக்கு அது நிஜம் என்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

அத்தகைய மெய்நிகர் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ள பேஸ்புக், அதற்கான கருவிகள்  மற்றும் கண்ணாடிகளை தயாரிக்கும் அக்குலஸ் விஆர் (Oculus VR) நிறுவனத்தை 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கடந்த ஆண்டு வாங்கியது.

தற்போது, அத்தகைய தொழில்நுட்பத்தை வெகு விரைவில் அறிமுகப்படுத்த பேஸ்புக் தீவிரம் காட்டி வருகின்றது.

இது தொடர்பாக பேஸ்புக் பொறியியல் பிரிவின் துணைத் தலைவர் மைக் ஸ்க்ரோப்ஃபர் கூறுகையில், “அக்குலஸ் அறிமுகப்படுத்திய மெய்நிகர் தொழில்நுட்பத்தை நீங்கள் வெகு விரைவில் உணர உள்ளீர்கள். அது பயனருக்கு இதுவரை பார்த்திராத புதிய அனுபவத்தை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்குலஸின் கருவிகள் இந்த வருடத்தின் இறுதிக்குள் வர்த்தகத்திற்கு வரும் என்று அந்நிறுவனத்தின் நிறுவனர் பால்மர் லக்கி கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எங்கோ ஒரு நாட்டில் இருக்கும் நண்பர், உறவினர் கேமரா, இணையம் மூலம் நம் கண்முன்னே தெரிந்தது முதன் முதலில் பெரிய ஆச்சரியத்தை அளித்தது.

இன்னும் சில மாதங்களில் அறிமுகமாகும் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம், குறிப்பிட்ட அந்த நபர் நம் அருகில் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தினால், அது எத்தகைய ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அத்தகைய ஆச்சரியத்தை பேஸ்புக்  நமக்கு அளிக்க இருக்கின்றது.