Home நாடு கித்தா லாவான் பேரணி: ரபிசி உட்பட கைது செய்யப்பட்ட முக்கியத் தலைவர்கள் விடுதலை!

கித்தா லாவான் பேரணி: ரபிசி உட்பட கைது செய்யப்பட்ட முக்கியத் தலைவர்கள் விடுதலை!

698
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 30 – கித்தா லாவான் பேரணி தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த பிகேஆர் தலைவர்கள் மற்றும் போராட்டவாதிகள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லி மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளர் ஃபரிஸ் மூசா மற்றும் போராட்டவாதி ஹிஷாமுடின் ராயிஸ் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

11102614_938999789467862_2803437799685586085_n

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை ரபிசியும், அன்று இரவு ஹிஷாமுடின் ராயிஸும் கைது செய்யப்பட்டனர். கடந்த சனிக்கிழமை கித்தா லவான் பேரணி நிறைவடைந்த பின்னர் ஃபரிஸ் மூசா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இப்பேரணி தொடர்பில் நேற்று கைதான ஷா ஆலாம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் பாஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான காலிட் சாமாட் நேற்று டாங் வாங்கி காவல்நிலையத்தில் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.