Home Featured நாடு பெர்சே 4.0 பேரணி டத்தாரான் மெர்டேக்காவில் தான் நடக்கும் – கித்தா லாவான் திட்டவட்டம்

பெர்சே 4.0 பேரணி டத்தாரான் மெர்டேக்காவில் தான் நடக்கும் – கித்தா லாவான் திட்டவட்டம்

911
0
SHARE
Ad

Bersih 4கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – பெர்சே 4.0 பேரணிக்கு புக்கிட் ஜாலில் அரங்கத்தைப் பயன்படுத்தும் படி, தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் வலியுறுத்தியும், அதைப் பொருட்படுத்தாத பேரணி ஏற்பாட்டாளர்கள், மக்களை டத்தாரான் மெர்டேக்காவிற்கு வரும் படி அழைப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து கித்தா லாவான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெர்சே 4.0 பேரணியில் கலந்து கொள்ள டத்தாரான் மெர்டேக்காவிற்கு செல்லும் படி கூடுதலாக மக்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளோம். அமைதியாகக் கூடுவது நமது உரிமை என்பதை உணர்ந்து மக்கள் தைரியமாக முன்வருவார்கள்” என்று தெரிவித்துள்ளது.