Home Featured நாடு மரியா உட்பட மூன்று பேர் மீது அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் வழக்கு!

மரியா உட்பட மூன்று பேர் மீது அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் வழக்கு!

680
0
SHARE
Ad

Mariaகோலாலம்பூர் – கடந்த மார்ச் 28-ம் தேதி நடைபெற்ற #கித்த லாவான் பேரணியில் கலந்து கொண்டதற்காக, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, பிகேஆர் பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் திஸ் தின் மற்றும் இன்னும் இரண்டு பேர் மீது அமைதிப் பேரணி சட்டம் (பிஏஏ) 2012-ன் கீழ் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர்கள் தாங்கள் குற்றம் செய்யவில்லை என வாதிட்டதைத் தொடர்ந்து, நீதிபதி முகமட் பைசல் இஸ்மாயில் 500 ரிங்கிட் பிணையில் விடுவித்ததோடு, எதிர்வரும் அக்டோபர் 16-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

அமைதிப்பேரணி சட்டப்பிரிவு 4(2)(c)-ன் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10,000 ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படலாம். அதேவேளையில் சிம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.

#TamilSchoolmychoice