“எங்கேயும் எப்பொழுதும்”,“இவன் வேற மாதிரி” படங்களைத் தொடர்ந்து சரவணன் இயக்கும் “வலியவன்” படம் தனிக்கைக்குட்பட்டு யூ சான்றிதழுடன் வரும் மார்ச் 27-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
“வலியவன்” படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க டி.இமான் இசையமைத்திருக்கிறார். “குட்டிப்புலி” படத்தை இயக்கிய முத்தையா இயக்கும் படம் கார்த்தி நடிக்கும் ’கொம்பன்’.
இப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தப் படம் என்பதால் தனிக்கைக் குழுவினர் பார்வையில் இருக்கிறது. மேலும் கொம்பன் ஏப்ரல் 2-ல் வெளியிட ‘ஸ்டூடியோ க்ரீன்’ தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
360-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ’கொம்பன்’ வெளிவரயிருக்கிறது. எனினும் ஏப்ரல் 2-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ‘கொம்பன்’ படம் வெளியீடு தேதியில் சற்று மாற்றங்கள் நிகழலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.