Home உலகம் சிங்கப்பூரை தனித்துவத்துடன் பகுத்துப் பார்த்தவர் லீ குவான் யூ – ஜான் கெர்ரி

சிங்கப்பூரை தனித்துவத்துடன் பகுத்துப் பார்த்தவர் லீ குவான் யூ – ஜான் கெர்ரி

626
0
SHARE
Ad

john-kerryவாஷிங்டன், மார்ச் 24 – சிங்கப்பூரை தனித்துவத்துடன் பகுத்துப் பார்த்தவர் லீ குவான் யூ என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.

லீ குவான் யூவின் மறைவுக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூரின் முதல் பிரதமராக லீ குவான் யூ 1959-ம் ஆண்டு பொறுப்பேற்ற போது, சிங்கப்பூர் புதிதாக சுதந்திரம் அடைந்த நாடு. நிச்சயமற்ற எதிர்காலத்தை கொண்டிருந்த நாடு அது. ஆனால் 31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் பதவியிலிருந்து லீ குவான் யூ விலகியபோது, அந்த சிறிய தீவு உலகின் மிகுந்த வளம் மிக்க, சக்தி வாய்ந்த நாடாக உருப்பெற்று இருந்தது.”

#TamilSchoolmychoice

“லீ குவான் யூ அறிவாற்றலை வெளிப்படுத்தியவர். வாழ்க்கை, அரசியல் மற்றும் உலக விவகாரங்கள் குறித்து அவருடன் கலந்துரையாடியதன் மூலம் மிக அரிய பயனுள்ள கருத்துக்களை பெறக் கூடிய நல்வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆசியாவை மிக அணுக்கமாகவும் தனித்துவத்துடனும் பகுத்துப் பார்க்கக்கூடியவராக இருந்தார் லீ குவான் யூ,” என்று ஜான் கெர்ரி குறிப்பிட்டுள்ளார்.

Lee Kuan Yew

லீ குவான் யூ ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் மிக நெருக்கமான பங்காளி நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் விளங்கியது என்று கூறியுள்ள அவர், அவரது மறைவால் வாடும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் ஒட்டுமொத்த லீ குடும்பத்தார், சிங்கப்பூர் மக்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக மேலும் ஜான் கெர்ரி குறிப்பிட்டுள்ளார்.