இந்நிலையில் ‘குருதிப்பூக்கள்’ என்ற தலைப்பில் இப்படத்தின் முதல் புகைப்படத்தை மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். ரத்தம் சிந்திய நிலையில் ஒரு ரோஜாப்பூவுடன், துப்பாக்கி இடம்பெற்றிருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வைரமுத்து, கார்க்கி இருவரும் இணைந்து பாடல்களை எழுதுகின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். விரைவில் தொடங்கவுள்ள இப்படத்திலிருந்து சாய் பல்லவியை நீக்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.