Home Featured தமிழ் நாடு மோடி எங்களை நம்ப வைத்து ஏமாற்றினார் – வைகோ ஆவேசம்!

மோடி எங்களை நம்ப வைத்து ஏமாற்றினார் – வைகோ ஆவேசம்!

698
0
SHARE
Ad

vaiko356-600கன்னியாகுமரி – நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப் பின் மோடி எங்களை நம்ப வைத்து கழுத்தறுத்தார் என்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ ஆவேசமாக பேசினார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆறு சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, ”எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. சாதி, மதங்களை கடந்த கூட்டணி தமிழகத்திலே உருவாகி உள்ளது. நான் அண்ணாவின் அரசியல் மாணவன். தமிழர்களுக்கு இடையூறோ, இழிச்சொல்லோ வந்தால் அதை என்னால் தாங்க முடியாது. இன்று தமிழ்நாடே பாழ்பட்டு கிடக்கிறது”.

#TamilSchoolmychoice

“ஊழல், மது என தமிழ்நாடு சீரழிந்து கிடக்கிறது. காமராஜர் ஆட்சி, அதற்குபின் அண்ணாவின் ஆட்சி தமிழகத்திலே சிறப்பாக இருந்தது. அதன் பின் எந்த ஆட்சியும் சிறப்பாக இல்லை. ஆடம்பரமான போக்கில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். ஜெயலலிதாவால் தமிழ்நாட்டை குட்டி சுவராக்கிவிட்டார்”.

“தி.மு.க., அ.தி.மு.க.வை விரட்டினால் தான் இந்த தமிழகம் சுத்தமாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றதும், மோடி எங்களை நம்ப வைத்து கழுத்தறுத்தார்”.

“ராஜபக்சேவை அழைத்தார், நாங்கள் அதற்கு கறுப்பு கொடி காட்டினோம். தமிழர்களை கொன்று குவித்தவனை சிவப்பு கம்பளம் விரித்து மோடி வரவேற்பதை கண்டித்து போராட்டம் செய்தேன்” என வைகோ பிரச்சாரம் செய்தார்.