Home இந்தியா நிதி நெருக்கடியில் தவிக்கும் தமிழக அரசு: ரூ.2 லட்சம் கோடிக்கு கடன்!

நிதி நெருக்கடியில் தவிக்கும் தமிழக அரசு: ரூ.2 லட்சம் கோடிக்கு கடன்!

713
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_9865534306சென்னை, மார்ச் 26 – தமிழக அரசுக்கு ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி கடன் உள்ளதாகவும், கடன் நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு முயன்று வருவதாகவும், கடுமையான  கட்டத்தை தாண்டி வருகிறோம் என நிதித் துறை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

தமிழக அரசு பட்ஜெட் குறித்து நிதித் துறை செயலாளர் சண்முகம் நேற்று  நிருபர்களிடம் கூறியதாவது: “2015-16ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட்டில், வருவாய் கணக்கில் வரவு ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 681 கோடியும்,  செலவு ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 297 கோடியும், பற்றாக்குறை ரூ,4,616 கோடியும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிதி நிலை அறிக்கையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்று, இந்த பேரவைக்கு வந்து நம்மையும், இந்த  அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழி நடத்தி மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை  என்று குறியது தமிழக சட்டசபையில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சட்டசபையில் காலை 10 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். சுமார் 2 மணி நேரம் 19 நிமிடங்களில் 78 பக்க அறிக்கையை வாசித்து  முடித்தார்.