Home உலகம் கிரிக்கெட்: இன்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது அரையிறுதி போட்டி!

கிரிக்கெட்: இன்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது அரையிறுதி போட்டி!

660
0
SHARE
Ad

india-australiaசிட்னி, மார்ச் 26 – உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் சிட்னி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. சிட்னியில் நடைபெறும் இந்தப்போட்டி மலேசிய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் இதுவரை 117 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 67 போட்டிகளிலும், இந்திய அணி 40 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டங்கள் சமநிலையில் முடிந்தன.

உலகக்கோப்பையில் இரு அணிகளும் பத்து போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஏழு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றியை வசமாக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

சிட்னி மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டிகளில ஆஸ்திரேலிய அணியின்  கையே ஓங்கியிருக்கிறது. இவ்விரு அணிகளும் மோதிய 14 போட்டிகளில் 12 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.