Home கலை உலகம் கிரிக்கெட்டில் இந்தியா தோல்வியடைந்ததில் மகிழ்ச்சி – ராம் கோபால் வர்மா!

கிரிக்கெட்டில் இந்தியா தோல்வியடைந்ததில் மகிழ்ச்சி – ராம் கோபால் வர்மா!

523
0
SHARE
Ad

ram-gopal-varma-s-satya-2-movie-songs-launch-pictures00114-550x400_cமும்பை, மார்ச் 27 – உலகக் கோப்பை கிரிக்கெட் பேட்டியில் இந்தியா தோல்வியடைந்ததில் மகிழ்ச்சி என இயக்குநர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் பதிவு செய்துள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது டுவீட்டர் பக்கத்தில், “இந்தியா தோல்வியடைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. கிரிக்கெட்டை விட அதன் ரசிகர்கள் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது.

எனக்கு என் தேசத்தை பிடிக்கும், அதனால் கிரிக்கெட்டைப் பிடிக்காது. ஏனென்றால் என் நாட்டு மக்கள் வேலை செய்வதை விட்டுவிட்டு கிரிக்கெட் பார்க்கின்றனர். இந்த கிரிக்கெட் வியாதியிலிருந்து என் நாட்டு மக்களை கடவுள் குணமடையச் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

#TamilSchoolmychoice

இந்திய அணியை மீண்டும் மீண்டும் தோற்கடிக்குமாறும் மற்ற அணிகளை கேட்டுக் கொள்கிறேன். அப்போதாவது இந்திய அணி விளையாடுவதை நிறுத்தி, என் மக்கள் கிரிக்கெட் பார்ப்பதை மறப்பார்கள். புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை விட கிரிக்கெட் போதை தேசிய வியாதி” என கருத்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ராம்கோபால் டுவிட்டரில் பதிவு செய்துள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்து எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.