Home உலகம் ஒரு நாட்டையே அழிக்கக்கூடிய விண்கல் – இன்று பூமியைக் கடக்கிறது!

ஒரு நாட்டையே அழிக்கக்கூடிய விண்கல் – இன்று பூமியைக் கடக்கிறது!

605
0
SHARE
Ad

science-asteroid-earth-flybyவாஷிங்டன், மார்ச் 27 – ஒரு நாட்டையே அழிக்கும் திறன் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று இன்று பூமியைக் கடக்க இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை அந்த விண்கல் பூமியில் மோதினால், பருவநிலை மாற்றம், நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2014 ஒய்.பி.35 என்று பெயர் சூட்டப்பட்டுள்ள விண்கல்லானது, 1000 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளதென்றும் அது, மணிக்கு சுமார் 37000 கி.மீ. வேகத்தில் பூமியைக் கடக்கும் என்றும் நாசா ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த விண்கல் பூமியை நெருங்க 4,473,807 கிலோ மீட்டர்களை கடந்து பயணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஒருவேளை இந்த விண்கல், பூமியின் மீது மோதினால், கடந்த 1908-ம் ஆண்டு சைபீரியாவின் துங்குஸ்காவில் விண்கல் விழுந்ததில் ஏற்பட்ட பாதிப்பைவிட பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சைபீரியாவில் விண்கல் மோதியதுபோது இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் அப்போது உணரப்பட்டது. விண்கல் மோதியபோது 80 மில்லியன் மரங்கள் அழிந்தன, சுமார் 5.0 அளவில் அதிர்வு காணப்பட்டது.

துங்குஸ்காவில் விழுந்த விண்கல் 50 மீட்டர் ஆழத்துக்குப் பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது. இதைவிட 2014 ஒய்.பி.35 விண்கல்லின் பாதிப்புகள் மிக அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பக்கிங்ஹாம்ஷைர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பில்நேப்பியர் கூறியதாவது:-

“துங்குஸ்கா போன்ற நிகழ்வுகள் எல்லாம் சிறியதுதான், பதிப்பு உண்மையில் மிகவும் ஆபத்தானது. அப்போது நாம் இதுபோன்ற விண்கல்களை அடையாளம் கண்டுக் கொள்ளவில்லை”.

“எனவே நாம் பாதிப்பை சமாளிக்க தயார்படுத்திக் கொள்ளாமல் இருந்தோம். ஆனால் 2014 ஒய்.பி.35 போன்ற விண்கற்கள் உலக அளவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.”

“ஆனால் நிகழ்வுகளை தடுக்கவும் ஏதோ ஒன்று உள்ளது. விண்கற்கள் பூமியில் மோதுவது என்பது ஒரு அரிதான நிகழ்வு ஆகும். இருப்பினும், விண்கற்கள் ஏற்படுத்தும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக நினைத்துவிட முடியாது”  என்று கூறியுள்ளார்.