சென்னை – “சூப்பர் ஸ்டார் அளித்துள்ள 5 லட்சம், 10 லட்சம் பெரிய தொகையை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சென்னை மக்கள் குழம்பியுள்ளனர்” என ரஜினியை வாரிய, பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நடிகர் விஜய் மற்றும் ராகவா லாரன்ஸ் அளித்த நிதியுதவியை பாராட்டி உள்ளார்.
அவர், “மற்ற நட்சத்திரங்கள் பிச்சை போடுவது போன்று அளித்த நிவாரணத் தொகை, விஜய் மற்றும் லாரன்ஸ் அளித்துள்ள அசாதாரணத் தொகைக்கு முன் அடித்துச் செல்லப்பட்டது” என்று தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்.
ஏற்கனவே ரஜினி அளித்த 10 லட்சம் ரூபாய் நிதியுதவி குறித்தும், கமல் அளித்த 15 லட்சம் ரூபாய் நிதியுதவி குறித்தும் ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நடிகர்களுடன் ஒப்பிட்டு ராம் கோபால் வர்மா பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
#TamilSchoolmychoice
இதுவரை ரசிகர்கள் மட்டுமே, நடிகர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்பதை மறந்து, அவர்களே எதிர்பார்க்காத அளவில் உயர்த்தி, அவர்கள் சாதாரண மனிதர்களாக தோன்றிய போது கடுமையாக தாழ்த்தி வந்தனர். அந்த வரிசையில் வர்மாவும் இணைந்துவிட்டார், என்றாலும் அவரும் சாதரண மனிதர் தானே.