மழை வெள்ளத்தில் குடியிருப்புப் பகுதிகள் மட்டுமல்லாது வணிக வளாகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் கட்டிடங்கள் மற்றும் வர்த்தக தளங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறையை அறிவித்துள்ள நிலையில், இதன் மூலம் மிகப் பெரிய அளவில் வர்த்தக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
டிசிஎஸ், காக்னிசன்ட், எச்சிஎல், இன்போசிஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், பாதியில் நின்று போன பணிகளை இந்தியாவில் பிற மாநிலங்களில் இருக்கும் தங்கள் கிளைகள் மூலம் மேற்கொண்டு வருகின்றன. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிகளை மேற்கொண்டு வந்தாலும், இதே போன்ற நிலை மீண்டும் தொடர்ந்தால் இனி என்ன செய்வது? என்ற கேள்வி நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது .
“எப்போதும் தொலைநோக்குப் பார்வையுடனும், மிகப் பெரும் இலாபத்தை ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்துடனும் தான் பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு உணர்வுகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் இடமில்லை. அதனால் நிறுவனங்கள் எடுக்க இருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என விரைவில் தெரியவரும்” என்று கூறியுள்ளார்.