Home Featured தமிழ் நாடு சென்னை வெள்ளம்: காலை இறுதி நிலவரம்!

சென்னை வெள்ளம்: காலை இறுதி நிலவரம்!

446
0
SHARE
Ad

Floods in Chennai claim hundreds of livesசென்னை – படிப்படியாக சென்னையைச் சூழ்ந்துள்ள வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில் இன்று காலை 11.00 மணி வரையிலான (மலேசிய நேரம்) இறுதி நிலவரச் செய்திகள் – சில வரிகளில்!

  • இன்று முதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் இயக்கம்
  • வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 இலட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்  வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
  • முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து  வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஏற்கனவே ஜெயலலிதா அறிவித்திருக்கின்றார்.
  • சென்னையில் 32 இடங்களில் பலிவு விலை காய்கறிக் கடைகள் திறக்கப்படுகின்றன என ஜெயலலிதா அறிவிப்பு
  • இதுவரையில் 11 இலட்சத்து 53 ஆயிரம் பேர் வெள்ளப் பேரிடரிலிருந்து காப்பாற்றப்பட்டு, 5,009 நிவாரண மையங்களில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ளனர்.
  • இன்று ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் பொதுமக்களின் வசதிகளுக்காக திறந்திருக்கும் என அறிவிப்பு
  • மியாட் மருத்துவமனையில் மின்வசதி இல்லாததால் 18 நோயாளிகள் மரணமடைந்ததைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் அப்போல்லோ மருத்துவமனைக்கும், ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
  • தமிழக வெள்ளத்திற்கு நிவாரண நிதியாக சிங்கப்பூர் அரசாங்கம் 50 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளது.
  • நிவாரணப் பொருட்களின் பொட்டலங்கள் மீது ஜெயலலிதா புகைப்படத்தைத் தன்னார்வக் குழுக்கள் யாராவது ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகப் போலீசார் அறிவிப்பு – இதற்கு ஜெயலலிதா ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் தகவல்
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு ஏற்படுத்தினால் உடனடியாக அதிமுகவின் தலைமைக்கு புகார் தெரிவிக்கலாம் என்று தொலைப்பேசி எண்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

 

 

#TamilSchoolmychoice