Home நாடு பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கைது!

பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கைது!

755
0
SHARE
Ad

rafizi 3 bilionகோலாலம்பூர், மார்ச் 27 – நாளை நடைபெறவிருக்கும் கித்தா லவான் பேரணி குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியிட்டதற்காக தேசநிந்தனை குற்றச்சாட்டின் கீழ், பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லியை காவல்துறையினர் இன்று மதியம் கைது செய்துள்ளனர்.

டாங் வாங்கி காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக ரபிசி அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக பிகேஆர் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் மற்றும் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

ரபிசி நேற்று வெளியிட்ட அறிக்கையில், நாளை நடைபெறவுள்ள மிகப் பெரிய அளவிலான கித்தா லவான் பேரணிக்கு பிகேஆர் தலைவர்கள், பெருமளவில் ஆதரவாளர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

 

 

Comments