Home உலகம் அண்டை நாடுகளுடன் நட்புறவு ஒப்பந்தம் – சீனா தயார்!

அண்டை நாடுகளுடன் நட்புறவு ஒப்பந்தம் – சீனா தயார்!

631
0
SHARE
Ad

chna-MMAP-mdபெய்ஜிங், மார்ச் 30 – அண்டை நாடுகளுடன் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள சீனா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீன அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் போவோ அனைத்துலக கருத்தரங்கில் கடந்த சனிக்கிழமை கலந்து கொண்ட அவர் கூறியதாவது:-

“தூரத்து உறவினர்களைவிட, அண்டை வீட்டார் மேல் என்று சீனாவில் ஒரு பழமொழி உண்டு. அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முயற்சிகளை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.”

#TamilSchoolmychoice

“நட்புறவு, ஒத்துழைப்பு, அரசியல் ஆளுமை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யும் விதமாக அண்டை நாடுகள் அனைத்துடனும் ஒப்பந்தம் ஏற்படுத்த நாம் தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

சீனப் பொருளாதாரம் குறித்து அவர் குறிப்பிடுகையில், “பொருளாதாரத்தில் தாராள மயம், வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கு ஏற்ற சூழல், முதலீட்டாளர்களின் சட்டபூர்வமான உரிமைகளுக்கும் நலன்களுக்கும் பாதுகாப்பு அளித்தல் ஆகியவற்றை சீனா உறுதி செய்யும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சீனா உருவாக்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இந்தியா உள்பட 30 நாடுகள், உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளன. ரஷ்யாவும் இந்த வங்கியில் பங்கு பெறப் போவதாக அறிவித்துள்ளது.

அந்த வங்கியில் உறுப்பு நாடாகச் சேருவதற்கு கடைசி நாளான மார்ச் 31-ஆம் தேதிக்குள் மேலும் பல நாடுகள் அதில் பங்கு பெறுவதாக அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாக ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவின் தென் பகுதியிலுள்ள ஹைனான் தீவில் நடைபெறும் இந்த அனைத்துலக கருத்தரங்கில், நேபாளம், இலங்கை அதிபர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், டாடா முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.