Home நாடு கோலாலம்பூரில் இலங்கை தமிழருக்காக கருஞ்சட்டை ஊர்வலம்

கோலாலம்பூரில் இலங்கை தமிழருக்காக கருஞ்சட்டை ஊர்வலம்

708
0
SHARE
Ad

rajapakse

கோலாலம்பூர், மார்ச்.4- இலங்கையில் சிங்கள இராணுவத்தைக் கொண்டு தமிழீழ மக்களைக் கொன்று குவித்த அதிபர் மகிந்தா இராஜபக்சேக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மன்றத்தில் அவருக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய வேண்டும்.

அதில் சுயேச்சையாக அனைத்துலக விசாரணைக் குழு ஒன்றை அமைத்து அதன்வழி இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை, போர்க்குற்றம், மனித நேயத்திற்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும்  என்று நேற்று தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஈழத்தமிழருக்கான கருப்புச் சட்டை ஊர்வலத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

#TamilSchoolmychoice

தற்போது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை மன்றப் பேரவை கூட்டப்பட்டுள்ளது. அதில் உறுப்பியம் பெற்றுள்ள 44 நாடுகளில் ஆசிய வட்டாரத்தில் செல்வாக்குமிக்க வாக்களிக்கும் உரிமை மிக்க நாடாக மலேசிய நாடு திகழ்கிறது.

இலங்கை போரினால் பல துன்பங்களை எதிர் நோக்கியுள்ள தமிழர்களுக்கு மலேசிய தமிழர்களாகிய நாம், நமது  அரசாங்கத்தின் வழி அனைத்துலக சமூகத்திற்கும் நெருக்குதல் அளிக்கும் பணியைச் செய்வதுதான் சிறந்த வழிமுறையாக இருக்க முடியும் என  ஊர்வலத்தின் ஒருங்கிணைப்பாளர்  வழக்கறிஞர் க. ஆறுமுகம் குறிப்பிட்டர்.

நேற்று நடந்த கருஞ்சட்டை ஊர்வலம் லிட்டில் இந்தியா தாமரைக்குள வளாகத்திலிருந்து ஸ்காட் சாலை கந்தசாமி கோவில் அருகே வந்தடைந்தது.

கூட்டரசுப் பிரதேச மாநில பிபிபி  தலைவர்  டத்தோ அ. சந்திரகுமணன் உள்ளிட்ட 500க்கும்  மேற்பட்ட கருஞ்சட்டை அணிந்த மலேசியத் தமிழர்கள் தங்கள் உள்ளக்கிடக்கையும் உணர்வுகளையும் இராஜபக்சேக்கு எதிராக வெளிப்படுத்தி  கோஷமிட்டனர்.