இந்த படத்தில் சிவாஜி கணேசனின் ஜோடியாக வாணிஸ்ரீ நடித்திருந்தார். டி.ராமாநாயுடு தயாரித்து, கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கியிருந்தார்.
வசந்த மாளிகை வெளியான காலகட்டத்தில் 13 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டியும் 3 திரையரங்குகளில் 175 நாட்களை கடந்தும் ஒரே ஒரு திரையரங்கில் 200 நாட்களை தாண்டியும் ஓடி வெற்றி பெற்றது.
41 வருடங்களுக்குப் பின்னர், ‘வசந்த மாளிகை’ படம் டி.டி.எஸ். மற்றும் ‘சினிமாஸ்கோப்’பில் அகன்ற திரைப்படமாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்ட இந்த படம், தமிழ்நாடு முழுவதும் 100 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
Comments