Home Photo News சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த நாள் விழா

சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த நாள் விழா

2377
0
SHARE
Ad

சென்னை – மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த நாள் கடந்த திங்கட்கிழமை அக்டோபர் 1-ஆம் தேதி சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி மற்றும் நடிகர் திலகம் நீண்ட காலம் வாழ்ந்த அன்னை இல்லம் என்ற அவரது இல்லத்திலும் கொண்டாடப்பட்டது.

அந்த நிகழ்ச்சிகளில் மலேசிய சிவாஜி கணேசன் கலைமன்றத்தின் சார்பில் அதன் தலைவர் கே.விஜயசிங்கம் தனது மலேசிய நண்பர்களுடன் கலந்து கொண்டார்.

பல்வேறு தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களும் அந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார்கள். மூத்த கலைஞர்கள் சிலருக்கு சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

#TamilSchoolmychoice

சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எதிர்வரும் அக்டோபர் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் மலேசியாவில் நடைபெறும் என்றும் மலேசிய சிவாஜி கலைமன்றத்தின் தலைவர் கே.விஜயசிங்கம் அறிவித்திருக்கிறார்.

அந்த நிகழ்ச்சிகளின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

படங்கள் உதவி: கே.விஜயசிங்கம்