Home One Line P2 சிவாஜி கணேசன்: “அவரது மனித உடல், அவரது பாத்திரங்கள் இருக்கும் வரையில் அழியாது!”- கமல்ஹாசன்

சிவாஜி கணேசன்: “அவரது மனித உடல், அவரது பாத்திரங்கள் இருக்கும் வரையில் அழியாது!”- கமல்ஹாசன்

1242
0
SHARE
Ad

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எல்லா காலத்திலும் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று நடிகர் கமல்ஹாசன் தமது டுவிட்டர் பக்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) அவரது 91-வது பிறந்த நாளை முன்னிட்டு பதிவிட்டுள்ளார்.

இந்த சிறப்பு நாளில், நேற்று சிவாஜி கணேசனின் இரசிகர்கள் தங்களுக்கு பிடித்த காட்சிகள், காணொளிகள் மற்றும் தருணங்களை  சமூக ஊடகங்களில் பகிரிந்து கொண்டனர்.

நடிகர் திலகத்தின் அனைத்து இரசிகர்களையும் போலவே, அவரது மனித உடல், அவரது பாத்திரங்கள் இருக்கும் வரையில் அழியாது இருக்கும் என்று நானும் நம்புகிறேன்.” என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கமல்ஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் கோலிவுட்டில் இதுவரையிலும் கண்டிராத மிகச் சிறந்த நடிகர்கள் என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்கள். சிவாஜியை தனது வழிகாட்டியாக கமல்ஹாசன் கருதுகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அந்நாட்களில், கமல்ஹாசன், சிவாஜி மற்றும் இயக்குனர் கே.பாலசந்தர் ஆகியோரை தனது ஆசிரியர்களாகக் கருதி, சினிமாவின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.

கமல்ஹாசனையும் சிவாஜி கணேசனையும் ஒன்றாகக் கொண்டுவந்த படமான ‘தேவர் மகன்’ படம், கோலிவுட்டில் ஒரு சின்னமாகக் கொண்டாடப்படுகிறது. இப்படத்தில் இவ்விரண்டு அசாதாரண நடிகர்களும் ஒருவருக்கொருவர் தங்களுக்கான திரை இடத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

சமீபத்தில், கமல்ஹாசன் தேவர் மகனின் தொடர்ச்சியை அறிவித்திருந்தார். இருப்பினும், அது தொடர்பான வேலைகள் எப்போது தொடங்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.