Home One Line P1 ஓரினச் சேர்க்கை காணொளி விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது!- மஸ்லான் மன்சோர்

ஓரினச் சேர்க்கை காணொளி விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது!- மஸ்லான் மன்சோர்

694
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி சம்பந்தப்படுத்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி மீதான விசாரணை இன்னும் காவல் துறையின் விசாரணையில் உள்ளது என்று துணை காவல் துறைத் தலைவர் மஸ்லான் மன்சோர் இன்று புதன்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.

இன்னும் விசாரணையில் உள்ளது. விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளதுஎன்று அவர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

பிகேஆர் கட்சியின் சாந்துபோங் தொகுதி முன்னாள் இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ், முன்னதாக  அந்த காணொளியில் இருப்பது தாம்தான் என்றும், அவருடன் இருப்பது அஸ்மின் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

தான் பாலியல் காணொளியில் ஈடுப்பட்டதை மறுத்துள்ள அஸ்மின், தனது அரசியல் வாழ்க்கையை அழிக்கும் முயற்சி அது என மறுத்துவிட்டார்.

இந்த காணொளி மூன்று மாதங்களுக்கு முன், அதாவது ஜூன் 11-ஆம தேதி அதிகாலையில் வெளியிடப்பட்டது.

விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், எதையும் வெளியிட காவல் துறையினர் தயாராக இல்லை என்று மஸ்லான் கூறினார்.