Home One Line P1 வலைப்புணர்ச்சி மற்றும் மனித கடத்தலை கல்வி அமைச்சு பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது!

வலைப்புணர்ச்சி மற்றும் மனித கடத்தலை கல்வி அமைச்சு பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது!

890
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இடைநிலைப் பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வலைப்புணர்ச்சி மற்றும் மனித கடத்தலை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது என்று அதன் துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் தயார்நிலையை அதிகரிப்பதற்கும் அமைச்சின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த இரண்டு தலைப்புகளும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஆரம்பப்பள்ளி மாணவர்கள் மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி மற்றும் சுகாதார பாடங்களில் பாலியல் கல்வி குறித்த பாடத்திட்டம் உள்ளது. மேலும், ஆரம்பப்பள்ளியில், மாணவர்களுக்கு பொருத்தமான மற்றும் பொருத்தமற்ற தொடுதல் கற்பிக்கப்படுகிறது.” என்று அவர் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சபாவில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை அடுத்து, ஆடவவின் கண்ணை ஐஸ்கிரீம் குச்சியால் குத்தியதாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகி, கவலைகளை எழுப்பியுள்ளது. பெற்றோர்கள் பள்ளிகளில் ஒருவித தற்காப்பு கற்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

நாங்கள் தைக்குவாண்டோ போன்ற தற்காப்புக் கலைகளை மாணவர்களுக்கு கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.” என்று அவர் கூறினார்.