Home One Line P1 ஜிஎஸ்டி, எஸ்எஸ்டி வரிகளை தவிர்த்து விவேக வரிவிதிப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்!

ஜிஎஸ்டி, எஸ்எஸ்டி வரிகளை தவிர்த்து விவேக வரிவிதிப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்!

812
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருளாதார நிபுணரான பேராசிரியர் டாக்டர் ஜோமோ குவாமே சுந்தரம்,  பொருள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஒரு சிலர் குறிப்பிடுவதை, குறிப்பாக 2020 வரவு செலவுத் திட்டத்தில் அமல்படுத்தப்படுத்த வேண்டும் என்பதை எதிர்த்துள்ளார்.

அதே நேரத்தில், தற்போதுள்ள முறையை விவேக வரிவிதிப்புடன் (smart taxation) மாற்ற வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

இருப்பினும்,  இந்த திட்டத்தை செயல்படுத்த நேரம் மிகக் குறைவாக இருப்பதை ஜோமோ ஒப்புக் கொண்டார்.

#TamilSchoolmychoice

ஜோமோவின் கூற்றுப்படி, ஜிஎஸ்டி அல்லது எஸ்எஸ்டி வரிகள் குறித்த தமது கருத்துக்கள் மாறவில்லை என்று தெரிவித்தார்.

இது குறித்த எனது கருத்துக்கள் புதியவை அல்ல. ஜிஎஸ்டி மற்றும் எஸ்எஸ்டி முற்போக்கானதல்ல என்று நான் வாதிடுகிறேன். ஒரு முற்போக்கான நுகர்வு வரியை உருவாக்குவது எளிதானது அல்ல, ”என்று அவர் மேலும் கூறினார்.

பொருளாதார வல்லுநர்கள் உட்பட பல தரப்பினர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளதை  ஜோமோ ஒப்புக் கொண்டார்.

முன்னதாக, மலேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் (எம்ஐஇஆர்) 2020 வரவு செலவுத் திட்டத்தில் ஜிஎஸ்டியை, மூன்று விழுக்காடு குறைந்த விகிதத்தில், மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திடம் பரிந்துரைத்துள்ளது.