Home உலகம் இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சீனா உறுதி!

இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சீனா உறுதி!

543
0
SHARE
Ad

china vs srilankaகொழும்ப்ய், ஏப்ரல் 2 – இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற மைத்ரிபாலா சிறிசேனா இந்தியாவுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டுக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.

கடந்த வாரம் இலங்கை அதிபர் சிறிசேனா சீனா சென்று வந்த நிலையில் இந்த நிதிக்கடன் குறித்த அறிவிப்பை, அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளரான ரஜித சேனரத்ன வெளியிட்டுள்ளார்.

தலைநகர் கொழும்புவில் சீனாவின் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை சிறிசேனா நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ள நிலையிலும் சீனா நிதியுதவி வழங்க உறுதியளித்துள்ளது.

#TamilSchoolmychoice

அதுமட்டுமல்லாமல் கொழும்பு புறநகர் பகுதியில் நடைபெற்று சாலை பணிகள் குறித்த 520 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்ட மதிப்பில் 225.73 மில்லியன் டாலர் தொகையை குறைத்துக் கொள்ளவும் சீனா சம்மதித்துள்ளது.

எப்படியாவது சிறிசேனாவை தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்று சீனா திட்டமிட்டு வருவதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றனர். இரு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டு நடத்திய பேச்சுவார்த்தையில்,

எவ்வித நிபந்தனையும் இல்லாமல் சீன பிரதிநிதிகள் இந்த நிதியுதவியை அளிப்பதாக உறுதியளித்து உள்ளதாகவும், கொழும்பு துறைமுக நகர திட்டம் குறித்து அப்போது எதுவும் பேசவில்லை என்றும் ரஜித கூறியுள்ளார்.