Home வணிகம்/தொழில் நுட்பம் ஆசிய நாடுகளுக்கு தனி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு – டோனி வலியுறுத்தல்!   

ஆசிய நாடுகளுக்கு தனி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு – டோனி வலியுறுத்தல்!   

640
0
SHARE
Ad

tony-fernandes-airasia1கோலாலம்பூர், ஏப்ரல் 7 – ‘ஆசிய’ (ASEAN) நாடுகளுக்கென தனி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பினை உருவாக்க வேண்டும் என ஏர் ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஆசிய உறுப்பினர்களுக்கு அவர் விடுத்துள்ள அழைப்பில் கூறியிருப்பதாவது:- “ஐரோப்பிய நாடுகளுக்கென தனி விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையமாக ஈஸா‘ (Easa) செயல்படுவது போல் ஆசிய நாடுகளுக்கும் தனி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பினை உருவாக்க வேண்டும். அதற்கு இதுவே சரியான தருணம்.”

அத்தகைய புதிய அமைப்பினை உருவாக்குவது எதிர்காலத்தில் அதிக முக்கியத்துவம் பெரும். எனினும், இதற்கான ஒத்துழைப்பினை ஏசியனைச் சேர்ந்த 10 நாடுகளும் வழங்குமா என்பது சந்தேகமே.”

#TamilSchoolmychoice

“ஐரோப்பாவை பொருத்தவரை, ஈஸா ஆணையம், விமான போக்குவரத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கான அங்கீகாரத்தை கவனித்துக் கொள்ளுதல், விமானங்களுக்கான பொருட்களின் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளை கவனித்தல் போன்றவற்றை செய்கின்றது.”

இதன் மூலம் விமான நிறுவனங்களின் பணிகள் குறைந்து விடுகின்றன” என்று கூறியுள்ளார்.