Home வாழ் நலம் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் கேரட்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் கேரட்!

735
0
SHARE
Ad

Eveningஏப்ரல் 8 – ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும்.

மேலும் நிபுணர்களும், பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த காலங்களில் அதிகம் சாப்பிட்டு வந்தால், அந்த பருவக் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறுகின்றனர். இந்த கூற்று ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் தான்.

#TamilSchoolmychoice

கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

இரத்தத்தை சுத்தப்படுத்தும்:

ஆண்கள் அவ்வப்போது இரத்தத்தைத் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு வாரத்திற்கு 2 முறை கேரட் சாறு குடிக்கலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம்.

123-4_resizeவிந்தணுக்களை அதிகரிக்கும்:

ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.

செரிமான சக்தியை அதிகரிக்கும்:

கேரட் செரிமானத்திற்கும் உதவும். ஆகவே செரிமான பிரச்சனையால் அவதிப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை சாப்பிட்டு வந்தால், விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும்.

Carrotsகொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும்:

ஆண்கள் எப்போதுமே தங்களது உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தினமும் இரவில் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் சாறு குடித்து வர, உடலில் உள்ள கொழுப்பின் அளவானது கட்டுப்பாட்டுன் இருக்கும்.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்:

கேரட் சாப்பிட்டால், கொழுப்பின் அளவானது குறைந்து, இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.