Home கலை உலகம் ‘கொம்பன்’ படத்தை எதிர்த்த கிருஷ்ணசாமி மீது நஷ்ட ஈடு வழக்கு!

‘கொம்பன்’ படத்தை எதிர்த்த கிருஷ்ணசாமி மீது நஷ்ட ஈடு வழக்கு!

750
0
SHARE
Ad

komban-poster-3சென்னை, ஏப்ரல் 8 – இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியாக படம் ‘கொம்பன்’. இப்படத்தை ‘ஸ்டூடியோ க்ரீன்’ நிறுவனம் தயாரித்தது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

‘கொம்பன்’ படத்தில் குறிப்பிட்ட ஜாதியை அவதூறாக சித்தரித்துள்ளதாகவும், மேலும் இதனால் ஜாதி கலவரம் வரலாம் எனவும்  ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

பல எதிர்ப்புகளை மீறி இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த வழக்கு நடந்த வேளையில் படம் ஏப்ரல் 1-ஆம் தேதி காலயில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, மாலை தான் வெளியானது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் ’கொம்பன்’ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “இந்தப் படத்துக்கு தடை கேட்ட ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெறும் அம்புதான். இதன் பின்னணியில் அரசியல் உள்ளது”.

“இந்த பிரச்சனையால் 120 திரையரங்குகள் குறைவகாகவே கிடைதத்து. படத்துக்கு இப்போது நல்ல வரவேற்பு இருப்பதால் வரும் இன்று முதல் திரையரங்குகளை மேலும் அதிகரிக்க இருக்கிறோம்”.

“அதுமட்டுமன்றி, கிருஷ்ணசாமியின் எதிர்ப்பால் வெளிநாட்டுக்கும் சரியான நேரத்தில் படத்தை அனுப்ப முடியாது பண இழப்பை சந்தித்திருக்கிறோம். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் அவரிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.