Home கலை உலகம் நாளை கொம்பன், நண்பேன்டா படங்கள் வெளியீடு!

நாளை கொம்பன், நண்பேன்டா படங்கள் வெளியீடு!

691
0
SHARE
Ad

komban-posterசென்னை, ஏப்ரல் 1 – கார்த்தி, லெட்சுமி மேனன் நடிப்பில், முத்தையா இயக்கிய ‘கொம்பன்’ படமும், உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் ஜெகதீஷ் இயக்கியிருக்கும் ‘நண்பேண்டா’ படமும் நாளை வெளியாகிறது.

‘ஸ்டூடியோ க்ரீன்’ தயாரித்துள்ள ‘கொம்பன்’ படம் பல சர்ச்சைகளைத் தாண்டி நாளை 460-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளிவரயிருக்கிறது. மேலும், உதயநிதி ஸ்டாலின் நடித்து தயாரித்துள்ள ‘நண்பேன்டா’ படமும் நாளை வெளியாக உள்ளது.

அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படமும் 430 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice