Home நாடு அன்வார் இன்னும் பெர்மாத்தாங் பாவ் எம்பி தான் – தேர்தல் ஆணையம்

அன்வார் இன்னும் பெர்மாத்தாங் பாவ் எம்பி தான் – தேர்தல் ஆணையம்

829
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 1 – அரச மன்னிப்பு நிராகரிக்கப்பட்டது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் தனக்கு வராததால், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், இன்னும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் தான் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அசிஸ் முகமட் யூசோப் இன்று மலாய் மெயில் இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார்.

Tan-Sri-Abdul-Aziz-Mohd-Yusof2

அரச மன்னிப்பு மனு நிராகரிக்கப்பட்டதால், அன்வார் தனது பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கின்றார் என சட்டத்துறை இலாகாவின் சிவில் பிரிவிற்கு தலைமை வகிப்பவரும், மூத்த கூட்டரசு வழக்கறிஞருமான அமர்ஜித் சிங் இன்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

 

 

Comments