Home நாடு அன்வார் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழந்தார் – சபாநாயகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அன்வார் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழந்தார் – சபாநாயகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

676
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 1 – எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியை இழந்தார் என்றும், அத்தொகுதிக்கான காலியிடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றும் சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகர் அமின் மூலியா அறிவித்துள்ளார்.

Tan_Sri_Pandikar_Amin_Mulia34

அரச மன்னிப்பு விசாரணைக் குழுவிடமிருந்து தனக்கு கடிதம் வந்துவிட்டதாகவும், அன்வாரின் அரச மன்னிப்பு நிராகரிக்கப்பட்டு அவர் சிறை தண்டனையைத் தொடர்வார் என்ற தகவல் அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் பண்டிகர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“கூட்டரசு அரசியலமைப்பு சட்டவிதி 54-ன் கீழ் பெர்மாத்தாங் பாவ் காலியிடம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்கப்பட்டது” என்றும் பண்டிகர் கூறியுள்ளார்.

இதன் மூலம் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதிக்காக இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.