Home நாடு ‘இந்திய பெருவிழா’ 2015-இன் ஒரு பகுதியாக பினாங்கில் ‘டிஜிட்டல் இந்தியா’ கண்காட்சி

‘இந்திய பெருவிழா’ 2015-இன் ஒரு பகுதியாக பினாங்கில் ‘டிஜிட்டல் இந்தியா’ கண்காட்சி

682
0
SHARE
Ad

Festival of India Logoஜோர்ஜ்டவுன், ஏப்ரல் 17 – கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகம், முதன் முறையாக இவ்வாண்ணு மார்ச் முதல் ஜூன் இறுதி வரை ‘இந்திய பெருவிழா’ எனும் நிகழ்ச்சியை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கோணங்களில் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.

இந்த பெருவிழாவினை முன்னிட்டு, இந்திய தூதரகம் பல பண்பாட்டு நிகழ்வுகளையும் இந்திய கலை கலாச்சார நிகழ்வுகளையும் மலேசியாவில் நடத்தவுள்ளது.

இந்தியாவின் தகவல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத் துறைகளின் அடித்தளத்தையும் அதன் சாதனைகளையும் சித்தரிக்கும் விதமாக ‘டிஜிட்டல் இந்தியா’ (Digital India) எனும் கண்காட்சி இந்திய பெருவிழா 2015-இன், ஒரு முக்கிய அங்கமாகும்.

#TamilSchoolmychoice

Festival of India 20151.2 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியா, உலகளாவிய நிலையில் பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். இந்திய நாகரிகமானது உலகின் மிக பழமையான மற்றும் தொன்மையான நாகரிகமாகும்.

இன்றைய நிலையில் இந்தியா,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தனித்தன்மையோடு விளங்கி முன்னணியில் நிற்கிறது. மேலும் பண்டைய இந்தியர்கள் வானியல், கணிதம், உலோகம், கட்டிட வரைவு, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற துறைகளில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகுந்த மேம்பாடு அடைந்திருந்தனர்.

சுதந்திரத்திற்குப் பின், பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்தியா, அறிவியல் ஆராய்ச்சியை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றது.

அணு சக்தி, விண்வெளி, விவசாயம் மற்றும் மின் உற்பத்தி போன்ற ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவமும் ஆதரவும் அளிக்கின்றது இந்திய அரசாங்கம்.

தற்போது டிஜிட்டல் எனப்படும் இலக்கவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு  பல்லாயிரக்கணக்கான இந்திய மக்களின் வாழ்க்கையின் மத்தியில் மிக வேகமாக வளர்ந்துள்ளது.

Lim Guan Engமலேசிய இந்திய தூதரகமும் இந்தியாவின் தேசிய அவையின் கீழ் இயங்கும் அறிவியல் அருங்காட்சியகமும் இணைந்து தகவல் தொழில்நுட்பம், வங்கியியல், பேரிடர் மேலாண்மை, விவசாயம், ஆளுகை, விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியினைச் சித்தரிக்கும் கண்காட்சியைக் கோலாலம்பூர் மற்றும் பினாங்கு மாநிலத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கண்காட்சி இந்திய அரசின் கலாச்சார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தால் பிரத்தியேகமாக மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேசிய அறிவியல் அருங்காட்சியகம் இந்தியா முழுவதும் 25 அறிவியல் அருங்காட்சியகத்தையும் உலகளவில் 22 அறிவியல் மையங்களையும் உருவாக்கி நிர்வாகிக்கின்றது.

இந்த கண்காட்சி  பினாங்கு மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்களால் எதிர்வரும் 19.04.2015-இல் மாலை 4.00 மணிக்கு பினாங்கு டவுன் ஹால், ஜாலான் பாடாங் கோத்தா லாமா, ஜோர்ஜ் டவுனில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படும்.

மேலும், இந்த கண்காட்சி 03.05.2015 வரை காலை 10.00 முதல் மாலை 6.00 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இக்கண்காட்சிகான நுழைவு இலவசமாகும். அதனைத் தொடர்ந்து, இதே கண்காட்சி 16.05.2015 முதல் 31.05.2015 வரை பொது மக்களுக்காக கோலாலம்பூரிலும் நடைபெறும்.