Home அவசியம் படிக்க வேண்டியவை “கூகுளின் தாயகமாகிறது இந்தியா” – கூகுள் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன்!

“கூகுளின் தாயகமாகிறது இந்தியா” – கூகுள் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன்!

532
0
SHARE
Ad

புது டெல்லி, ஜூலை 6 – “இந்தியா அதன் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகக் கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களுக்கு அடுத்த தாயகமாகிறது” என்று கூகுள் இந்தியாவின் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ (Digital India) திட்டம் பற்றி அறிக்கை ஒன்றில் ராஜன் ஆனந்தன் கூறியிருப்பதாவது:-

“ஆறு வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் பேர் சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு தொழில்நுட்பத் தொடக்கமும் இல்லை. ஆனால் தற்போது 8 முன்னணி நிறுவனங்களை இந்தியா கொண்டுள்ளது. அவை அனைத்தும் பில்லியன் டாலர்கள் மதிப்புடையவை. இந்த 8 நிறுவனங்களில் 3 பொது நிறுவனங்கள், 5 தனியார் நிறுவனங்கள். அமெரிக்காவிற்கு அடுத்ததாக இந்தியாவும், சீனாவும் தான் பில்லியன் டாலர்கள் மதிப்புடைய நிறுவனங்களைக் கொண்டுள்ளன. அதனால் இந்தியா, கூகுளுக்கு மட்டுமல்லாமல் பேஸ்புக் மற்றும் டுவிட்டருக்கும் தாயகமாக உருவாகி வருகிறது.”

#TamilSchoolmychoice

“எனினும், இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டியது ஒன்று தான். அது தான் இணையத்திற்கான ‘அலைவரிசை’ (Bandwidth). நம்மிடம் மற்ற நாடுகளைப் போல் போதுமான அலைவரிசை இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தைத் தொடங்கி வைத்த பின் இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “கூகுள் நிறுவனத்திடம் இந்தியர்கள் பலர் வேலை செய்யும் பொழுது,  நம்மால் இந்தியாவில் கூகுளை உருவாக்க முடியாதா?” என்று அவர் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.