Home Featured இந்தியா இணையதளம் மூலம் எப்ஐஆர் – தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் சாதனை!

இணையதளம் மூலம் எப்ஐஆர் – தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் சாதனை!

675
0
SHARE
Ad

first-information-reportபுதுடில்லி – எப்ஐஆர் எனப்படும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை இணையதளம் மூலமாகப் பதிவு செய்து இந்தியாவில் தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் சாதனை படைத்துள்ளன.

ஒரு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் பார்வையிடும் படியாக இணையதளத்தில் அதைக் கொண்டு வரும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.

இதற்காக புதிய மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டு அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

அதன்படி, எப்ஐஆர் -ஐ 100 சதவீதம் இணையதளம் மூலமாகப் பதிவு செய்து, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கோவா, குஜராத் போன்ற 13 மாநிலங்கள் சாதனை படைத்துள்ளன.

இந்தியா முழுவதும் தற்போது 15 ஆயிரம் காவல்நிலையங்களில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.