கோலாலம்பூர் – மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) syedsoutsidethebox, tabunginsider மற்றும் fotopages என்ற மூன்று இணையதளங்களை முடக்கம் செய்துள்ளது.
இன்று காலை முதல் அந்த மூன்று இணையதளங்களையும் திறக்க முடியவில்லை என நம்பப்படுகின்றது.
இம்மூன்று இணையதளங்களும் முடக்கம் செய்யப்பட்டதற்கான முழு காரணம் தெரியவில்லை.
என்றாலும், tabunginsider என்ற புதிதாக துவங்கப்பட்ட இணையதளம், தாபுங் ஹாஜி மேலாண்மைக்கு நெகாரா வங்கி அனுப்பிய எச்சரிக்கைக் கடிதத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விரைவில், இணையதளங்கள் முடக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெரியவரலாம்.