Home வணிகம்/தொழில் நுட்பம் நோன்பு பெருநாளன்று இலவச அழைப்பு சலுகை

நோன்பு பெருநாளன்று இலவச அழைப்பு சலுகை

725
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உள்ளூர் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் நோன்பு பெருநாளுக்கு இலவச அழைப்புகளை வழங்குவதாக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இன்று ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.

டிஜி, செல்காம், மேக்சிஸ், ரெட்டோன், டிஎம் யுனிபை, டைம் டாட்காம், டியூன் டாக், யு மொபைல், யூடோ மற்றும் ஒய்.டி.எல் ஆகியவற்றின் அனைத்து வாடிக்கையாளர்களும் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை இலவச அழைப்புகளை அனுபவிக்க முடியும் என்று அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதால், இந்த இலவச சேவையானது தங்கள் குடும்பங்களை சந்திக்க முடியாதவர்களுக்கு நன்மையாக அமையும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்கட்டண வசதி பயனர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும் வகையில் இந்த சிறப்பு சலுகை அமைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் பெரும்பாலான போஸ்ட்பெய்ட் பயனர்கள் ஏற்கனவே இலவச அழைப்புகளை பெற்று வருகின்றனர்.