Home நாடு கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனம் அவசியம்

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனம் அவசியம்

737
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஜனவரி 11 முதல் அமல்படுத்தப்பட்ட அவசரகால பிரகடனத்தை ஆதரித்துள்ளார். நாட்டில் மோசமடைந்து வரும் கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க இது அவசியம் என்று அவர் கூறினார்.

“எனவே, இன்று நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால அறிவிப்பு மோசமடைந்து வரும் சூழ்நிலையை கையாள்வதில் ஒரு செயலூக்கமான நடவடிக்கையாகும். மிக முக்கியமாக கடுமையான தடுப்பு, சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன,” என்று அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, தொற்றுநோய் கட்டுப்பாடில்லாமல் பரவுவதை எதிர்கொள்ளும் நாடுகள் உள்ளன எனவும், இதன் விளைவாக உபகரணங்கள் மற்றும் முன்னணி பணியாளர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“எனவே, நமது அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதுமான உபகரணங்கள் மற்றும் பணியாளர்களைத் தயார் நிலையில் வைத்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.